யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாளுடன் இளைஞன் கைது

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

போலி நாணயத்தாளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞன் ஒருவர் சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

யாழ்.தாவடி பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு 5 ஆயிரம் ரூபாய் தாளினை கொடுத்துள்ளார்.

அந்த தாளினை வாங்கிய கடை உரிமையாளருக்கு சந்தேகம் வர அது தொடர்பில் வீதி கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிசாரிடம் முறையிட்டார்.

அதனை அடுத்து நாணயத்தாளை கொடுத்த நபர் தனது மோட்டார் சைக்கிளையும் அவ்விடத்தில் கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அதனை அடுத்து சுன்னாக பொலிசார் மோட்டார் சைக்கிள் இலக்க தகட்டை வைத்து தப்பி சென்றவரை அடையாளம் கண்டு கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது மேலும் ஒரு 5 ஆயிரம் ரூபாய் தாளை அவரது உடமையில் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த இளைஞனை சுன்னாக பொலிசார் தமது தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Latest Offers