முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் நேற்று பிற்பகல் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டுசுட்டான் மாவடிப் பகுதியை சேர்ந்த சி.லோகேஸ்வரன் என்பவர் தோட்டத்திற்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது வழியில் நின்ற யானை தும்பிக்கையால் அவரை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர், அப்பகுதியில் நின்ற பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.