வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை பயணி விமானத்தில் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாடு ஒன்றிலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குவைத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானத்தில் குறித்த பயணி உயிரிழந்துள்ளார்.

59 வயதான இலங்கை பயணி ஒருவரே இன்று அதிகாலை விமானத்திற்குள் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணி இன்று காலை 6.10 மணியளவில் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL-230 விமானத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.