வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள விபுலானந்தா வீதியை அண்டி வசிக்கும் பெண்ணொருவரின் வீடு புகுந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனித்தம்பி கனகபூசணி எனும் சுமார் 70 வயதுடைய இந்த பெண் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் புகுந்து சுமார் 12 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தனது மகன் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.