திடீரென உடைந்து விழுந்த தொலைபேசி கம்பம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - நோர்வூட், தியசிரிகம பகுதியில் பேருந்து ஒன்று சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் அப்பகுதியில் ஒரு வழிபாதையாகவே போக்குவரத்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இன்று காலை தொலைபேசி இணைப்பு கம்பம் உடைந்து விழுந்தமையாலேயே பேருந்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொகவந்தலாவயிலிருந்து ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிவந்த தனியார் பேருந்தே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

Latest Offers