கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருடன் தொழிற்சந்தை நிகழ்வுக்கான கலந்துரையாடல்

Report Print Rusath in சமூகம்

வேலையில்லாத படித்த இளைஞர் சமூகத்தினரின் தொகை அதிகரித்து கொண்டு வருகின்ற மறுபுறத்தில் தொழில் தருனர்களின் திறனுள்ள தொழிலாளர்களுக்கான கேள்வியும் அதிகரித்து வருகின்றமைக்கு தீர்வு காணும் வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எப்.சி.ராகல், சிரேஸ்ட்ட விரிவுரையாளர்களான எ.அன்று மற்றும் சு.ஜெயப்பிரபா ஆகியோர் சார்பாக நடைபெற்றுள்ளது.

படித்த இளைஞர்களின் வேலையில்லாத நிலையினை படிப்படியாக மாற்றுவதனை நோக்கமாக கொண்டு அமைச்சு மட்டத்தில் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையினரால் தொழில் சந்தை மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்வு மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட நிகழ்வினை கிழக்கு பல்கலைக்கழத்துடன் இணைந்து நடத்துவதற்கான கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களுடன் உயர்தரம் படித்து தொழில் மற்றும் கல்வியினை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கல்வி பயிற்சி நிறுவனங்களையும் இங்கு ஒன்றிணைப்பதன் மூலம் திறனுள்ள தொழிற்படையினை உருவாக்கி இந்த சவாலினை முறியடிப்பதே எமது திட்டத்துக்கான நோக்கம் எனவும் அமைச்சில் இருந்து கலந்து கொண்ட உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் தெரிவித்துள்ளார்.

இந்த வேலையின்மை நிலையினை கருத்தில் கொண்டு தொழில் தருனர்களை தொழில் தேடுபவர்களுடன் ஒன்றிணைத்து இரு தரப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கான ஒரு திட்டமாக இதை முன்னெடுக்க உள்ளோம்.

இந்த திட்டம் மார்ச் மாத ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.