தோப்பூர், இக்பால் நகர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் உட்புகுந்து சேதம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர், தோப்பூர் இக்பால் நகர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் உட்புகுந்து பயிர்களையும் சுற்று வேலிகளையும் துவம்சம் செய்துள்ளன.

இச் சம்பவம் குறித்த பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இக் காட்டு யானைகளினால் நான்கு வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 32 மரங்கள் மற்றும் சுற்று வேலிகள் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தாங்கள் கஷ்டப்பட்டு பயிர்ச்செய்கை செய்து வரும் நிலையில் காட்டு யானைகள் இவ்வாறு நஷ்டங்களை ஏற்படுத்தி வருவதினால் தாம் மனரீதியாகவும், பொருளாதார அடிப்படையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.