நாட்டு மக்களுக்காக இலங்கையரின் புதிய முயற்சி

Report Print Ashik in சமூகம்

இலங்கையில் உள்ள அனைவரும் இன, மத பேதமின்றி சமாதானத்துடனும், சகவாழ்வுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மன்னாரை சேர்ந்த நபரொருவர் நல்லிணக்க முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார்.

38 வயதான அன்ரன் கிருஸ்னன் டயஸ் என்பவரே மன்னார் - தள்ளாடி பகுதியில் இருந்து அநுராதபுரம் வரை அங்க பிரதட்சணத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.

மன்னார், வங்காலை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஆன்மீக மற்றும் ஆயுல்வேத, சித்த மருத்துவ ரீதியில் தேர்ச்சி பெற்றாவராக காணப்படுகின்றார்.

இவர் ஆரம்பித்துள்ள குறித்த முயற்சி திருக்கேதீஸ்வரம், மடு ஊடாக எதிர்வரும் 40 நாட்களில் அநுராதபுரத்தை சென்றடையவுள்ளது.

தொடர்ச்சியாக அநேக பொதுமக்கள் இந்த முயற்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வருகின்றனர்.

Latest Offers