அகில இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Report Print Kumar in சமூகம்

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, புனித மைக்கேல் கல்லூரி அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை ரீதியில் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, புனித மைக்கேல் கல்லூரியின் உள்ளக அரங்கில் நேற்று மாலை இறுதிச்சுற்று போட்டி இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 12 அணிகள் இச் சுற்றுப்போட்டியில் பங்குகொண்டன.

இதன் போது இடம்பெற்ற இறுதி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும், சிறப்பு அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரனும் கலந்துகொண்டனர்.

Latest Offers

loading...