யாழில் முதலாவது தூயசக்தி மற்றும் சுகாதாரப் பிரயோகம் தொடர்பான சர்வதேச மாநாடு

Report Print Sinan in சமூகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் முதலாவது தூயசக்தி மற்றும் சுகாதாரப் பிரயோகம் தொடர்பான சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து பெற்றுக்கொண்ட நிதியுதவியுடன் இம் மாநாடு நடைபெறவுள்ளது.

இரு நாடுகளிற்கிடையேயான ஆய்வு தொடர்பான கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், நடைபெற்று கொண்டிருக்கும் ஆய்வுப்பணிகளை மேலும் முன்னெடுக்கும் நோக்கிலும் இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 300 ஆய்வாளர்கள் கலந்து கொள்ள உள்ளதுடன், இதில் 120 பேர் சர்வதேச ஆய்வாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட மாகாண பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான தொழிநுட்பதுறையிலான ஆர்வம் தொடர்பிலான சமீபகால பெறுபேறுகள் பற்றியதொரு கலந்துரையாடல் ஒன்றும் நாளை நடைபெறவுள்ளது.