பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தியும், கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் இருவேறு பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளன.

குறித்த ஆர்பாட்டங்கள் இன்றைய தினம் 300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவ நகரில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை, செல்வகந்த, ஜேப்பல்டன், பொகவந்தலாவ கீழ் பிரிவு ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொகவந்தலாவ, கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையில் இருந்து பொகவந்தலாவ செல்வகந்த சந்திவரை பேரணி இடம்பெற்று ஹட்டன், பொகவந்தலாவ மற்றும் பலாங்கொட பிராதன வீதிகளை மறித்து ஆரப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையினால் பொகவந்தலாவ ஹட்டன் போக்குவரத்து நான்கு மணித்தியாலம் தடைபட்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருப்பு கொடியினை ஏந்தியவாரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கூட்டு ஒப்பந்தத்தில் சைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் ஆலோசனைகளை கேட்காமல் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டு விட்டு தோட்ட தொழிலாளர்களை காட்டி கொடுத்து விட்டனர் என தெரிவித்தனர்.

இன்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்ட தொழிற்சங்கங்கள் ஊடகங்களில் ஊடாக அறிக்கை விடுகிறார்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த அடிப்படை சம்பளம் 700 ரூபா போதுமானதாக மக்கள் கூறியதாக பொய்யான அறிக்கைகளை கூறுகிறார்கள்.

நாங்கள் அறிக்கை விடும் அரசியல்வாதிகளுக்கு ஒன்று கூறுகின்றோம். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு கலந்துரையாடி விட்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டதை எங்களால் எற்று கொள்ள முடியாது.

அதனால்தான் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்ட வர்த்தமானியை தடை செய்துடன் பிரதமர் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையொன்றும் இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய பேச்சு வார்த்தையில் பிரதமர் விசேட கவனம் செலுத்தி எங்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவை பெற்று தர உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மஸ்கெலியா - குயின்ஸ்லேன் தோட்ட தொழிலாளர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டு ஒப்பந்தம் செய்தமைக்கு எதிராக ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்ததுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியுடனான இன்றைய பேச்சுவாத்தையில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி மேலதிக கொடுப்பனவையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers