புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி நியமனம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஐ.பி. சிசிர பண்டார, சட்டவிரோதமாக மண் ஏற்றிய லொறியை விடுவிப்பதற்கு 25,000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த பொலிஸ் நிலையத்திற்கு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய ஏறாவூரை வசிப்பிடமாகக் கொண்ட வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.