கிளிநொச்சியில் வங்கி நடவடிக்கையால் வர்த்தகர் பாதிப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி எவ்வித அறிவிப்புகளுமின்றி தமது கணக்கை நிறுத்தியுள்ளதாக வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி நகர் பகுதியில் வர்த்தகம் செய்துவரும் தமது கணக்கை வேறு ஒரு வர்த்தகரின் நலன் கருதி வங்கியானது எந்த வித அறிவிப்புக்களும் இல்லாது வங்கிக் கணக்கை நிறுத்தி இருப்பதாக வர்த்தகர் தெரிவிக்கின்றார்.

கடந்த 23.01.2019 அன்று தனது கைத்தொலைபேசிக்கு தனது கணக்கில் இருந்து மூன்று தடவை சிறுதொகைப் பணம் பரிமாறப்பட்டதாக கிடைத்த குறுந்தகவலுக்கு அமைய அவர் வங்கியை தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.

இதற்கு வங்கியில் பணிபுரியும் நபர் உங்கள் கணக்கு வங்கியால் நிறுத்தப்பட்டு விட்டது எனக் கூறியுள்ளனர்.

அறிவித்தலின்றி எவ்வாறு நிறுத்த முடியும் பல இலட்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்ட கணக்கு 30ற்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் உள்ளன என வினவிய பொழுது,

அதற்கு வங்கி, உங்களுக்கு கடந்த 07.01.2019 அன்று கடிதம் அனுப்பியிருகின்றோம் 21.01.2019 அன்று உங்கள் கணக்கு நிறுத்தப்பட்டு விட்டது எனக் கூறியுள்ளனர்.

ஆனாலும் 22.01.2019 அன்று அவர் நிறுத்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 65000 ரூபாய் பணம் வைப்பில் இட்டிருகின்றார்.

அதனைவிட வர்த்தகரால் நிறுவனகளுக்கு வழங்கப்பட்ட 50000, 90000 ரூபாய் காசோலைகள் வங்கியால் மாற்றப்பட்டுள்ளதுடன் அவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தினை ஆராய்ந்த பொழுது 07.01.2019 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தில் 21.01.2019 அன்று வங்கிக் கணக்கு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இக் கடிதம் உள்ள கிளிநொச்சி பகுதியில் உள்ள உப தபால் அலுவலகத்தில் 23.01.2019 அன்று பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது இவற்றை பார்க்கும் போதே வங்கி சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் என்னையும் எனது வியாபாரத்தையும் வீதிக்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு செயற்ப்பட்டிருப்பது விளங்குகின்றது என குறித்த வர்த்தகர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் குறித்த வங்கியின் முகாமையாளரை தொடர்புகொண்டு வினவிய பொழுது,

கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணம் எமக்கு சொல்ல முடியாது. ஆனாலும், ஒரு கடிதத்துடன் கணக்கை நாம் மூடுவது அல்ல இதற்கு முன்னரும் கடிதம் அனுப்பி இருப்போம் என்று தெரிவித்துள்ளார்

மீண்டும் நாம் வர்த்தகரை வினவிய பொழுது,

இதுவரை எவ்வித கடிதமும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு குறுதகவல் வந்த பொழுது வங்கியுடன் அறிவித்தலின்றி கணக்கு முடக்கியதாக நான் 23.01.2019 அன்று முரண்பட்ட போது கடிதம் அனுப்பி விட்டோம் என்று பொய் சொன்ன அவர்கள் அதன் பின்னரே உடனடியாக எனக்கு சொன்ன

திகதிகளில் கடிதத்தை தயார் செய்து அன்றைய தினமே கடிதத்தை பதிவுத் தபாலில் அனுப்பியுளார்கள்.

இதற்கான தாரவுகளை நீங்களே தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அவர்கள் இதற்கு முன் எனக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தால் அவர்களும் தபால் நிலையத்தில் தரவுகளை எடுத்து நிரூபிக்க முடியும் அறிவித்தலின்றி இவ்வாறு எனது கணக்கை நிறுத்தியமையால் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளேன்.

எவ்வித பின்புலங்களுமின்றி வணிகம் செய்து வரும் என் போன்றவர்கள் தான் இவ்வாரனாவர்களின் செயற்பாட்டால் தற்கொலை செய்பவர்கள் வங்கியின் இச் செயற்பாட்டால் முப்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

இதனால், அவர்களின் நன்மதிப்பை இழந்துள்ளேன் அதுமட்டுமல்லாது பல இலட்சம் தொகையான எனது வியாபாரம் நாசமாகியுள்ளது.

இவற்றுக்கு எல்லாம் வங்கியே எனக்கு பதில் கூற வேண்டும் இவாறான வங்கிகளில் கணக்குக்களை வைத்திருக்கும் என் போன்ற இடைத்தர வணிகர்கள் அவதானமாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

Latest Offers