இலங்கை சுங்கப்பணியாளர்களின் பணி பகிஸ்கரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விற்பனையாளர்கள்!

Report Print Akkash in சமூகம்

கொழும்பில் விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் இறக்குமதியாளர் சங்கம் இணைந்து இலங்கை சுங்கப்பணியாளர்களின் பணி பகிஸ்கரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடைகளை அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று ஊடகவியளாலர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை சுங்கப்பணியாளர்களின் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதன் காரணமாக விற்பனையாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

துறைமுகத்தில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இறக்கும் பணிகள் தாமதிப்பதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் பழுதடைவதாகவும் துறைமுக வாடகை பணம் அதிகரிப்பதன் காரணமாக தங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.