சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக மீண்டும் சார்ள்ஸ்

Report Print Manju in சமூகம்

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் அப்பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு 1 வருடகாலம் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய 3 மாத சேவையை பொறுத்து அவர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கடற்படையின் முன்னாள் அதிகாரியொருவர் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.

அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர தாக்கல் செய்திருந்தார். அவ்வமைச்சரவைப் பத்திரம் நிதியமைச்சரரால் இன்று மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அந்த அமைச்சரவை பத்திரத்தை நிதியமைச்சர் மீளப்பெற்றுக்கொண்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .

இதனையடுத்தே சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மீண்டும் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.