போலி நாணயத்தாளை மாற்ற முற்பட்ட நபருக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் போலியான 5000 ரூபாய் நாணயத்தாளை மாற்ற முற்பட்ட போது கடை உரிமையாளருக்கு பணத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

Latest Offers