காலவரையின்றி இழுத்து மூடப்பட்ட கல்வியியற் கல்லூரியின் சமையலறை

Report Print Thirumal Thirumal in சமூகம்
196Shares

ஹட்டன் - திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறை சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரையின் கீழ் இன்றைய தினம் குறித்த சமையல் அறை சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 450 ஆசிரியர் பயிலுநர்கள் பயிலும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் நாளாந்தம் இந்த சமையல் அறையிலிருந்தே இவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் இந்த சமையல் அறை அசுத்தமாக காணப்படுவதனாலும் சமையல் மேற்கொள்வதற்கு பொருத்தமான இடமாக இதனை வைத்திருக்காததனாலும் பயிலுநர்கள் நாளாந்தம் நோய்வாய்ப்பட்டு வருவதாகவும் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக சமையலறையினை சோதனை செய்ததாகவும் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 100இற்கும் மேற்பட்ட பயிலுநர் ஆசிரியர்கள் உணவு விசமானதில் நோய்வாய்ப்பட்டு கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தயாரிக்கப்பட்ட உணவுவகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் போதிய சுகாதாரமில்லாதிருப்பதால் இந்த சமையலறை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதாரப்பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.