காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் தொடர்ந்து இன்றுடன் 716ஆவது நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த உணவு பொருட்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் நாட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தினால் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களைச் சேர்ந்த 68 தாய்மாருக்கு 1,200 ரூபா பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள் அவர்களது போராட்டக் களத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.