இலங்கையில் தேடப்பட்ட பெரும்புள்ளி வெளிநாட்டு பொலிஸாரிடம் சிக்கியது எப்படி?

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகதுரே மதுஷ் உட்பட குழுவினர் இன்று டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகதுரே மதுஷின் இரண்டாவது மனையின் பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிறந்த நாள் விழாவிற்காக பிரபல பாடகரான அமல் பெரேரா, சினிமா நடிகரான ரயன் உட்பட குழுவினர் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த பிறந்த நாள் விருந்து தொடர்பில் இலங்கை புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களுக்கமைய அபுதாபி பொலிஸாருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு செயற்பாட்டிற்கமைய இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குள் இரண்டு அரசியல்வாதிகளும் உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாகதுரேயின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தையின் முதலாவது பிறந்த நாள் விருந்திலேயே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அபுதாபியில் பிறந்த நாள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களுக்கமைய அபுதாபி பொலிஸார் மூலம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யும் போது பாரியளவு போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.