யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! இரண்டு மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Report Print Murali Murali in சமூகம்

யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் வாள் வெட்டு குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரே இந்த தாக்குதலை நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி செல்லும் போது வாள் ஒன்றினை தவறவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, யாழில் இயங்கிய வாள் வெட்டுக்குழுக்களை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷாந்த் பெர்ணான்டோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், யாழில் மீண்டும் இவ்வாறான வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.