வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய புள்ளிகள்! மைத்திரி அதிரடி நடவடிக்கை?

Report Print Murali Murali in சமூகம்

டுபாயில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட குழுவினரை கொழும்புக்கு அழைத்து வர ஜனாதிபதி பணித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியலில் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட நான்கு பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் மதுஷிற்கு நேரடித் தொடர்பு உண்டு எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகவும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவராக மதுஷ் கருதப்படுகின்றார். போதைப்பொருள் வியாபாரம், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் மதுஷிற்கு தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.