யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவதூறு! இணையத்தளத்திற்கு எதிராக முறைப்பாடு

Report Print Sumi in சமூகம்

முக்கிய இணையத்தளம் ஒன்றுக்கு எதிராக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில், தாதியர்கள் இருவர் தகாத உறவில் ஈடுபட்டார்கள் என்று குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தின் போது, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார்.

அதன் பின்னர், குறித்த இணையதளத்திற்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும், குறித்த இணையத்தளத்திற்கு எதிராக போராட முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers