வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும்! விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு

Report Print Murali Murali in சமூகம்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இன்று வடக்கில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான காணிகள் மீளவும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதமும் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களுடைய மக்களின் சில தொகுதி காணிகளை கையளிக்கவுள்ளார்.

அதுமாத்திரமின்றி, வடமாகாணத்தில் வீட்டுப் பிரச்சினைகள், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடந்த அரசாங்கம் செய்யாத பணிகளை நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நான்கு வருடங்களில் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம்” என்றார்.