வவுனியாவில் பொலிஸாரை திக்குமுக்காட வைத்த கொள்ளையர்கள்! நடந்தது என்ன?

Report Print Vethu Vethu in சமூகம்
464Shares

வவுனியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தினால் பொலிஸார் குழப்பமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா - மன்னார் வீதியிலுள்ள கடை ஒன்றிற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள் பணம் கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடையின் உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில் பிரதேச மக்கள் இணைந்து குறித்த இளைஞர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மரக்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிக்க சென்ற இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் வாக்குமூலம் அளித்தனர்.

அதில், தாம் பழம் கொள்வனவு செய்வதற்கே கடைக்குள் சென்றதாகவும், அப்பிள் பழம் ஒன்றை வெட்டுவதற்காக கத்தியை வெளியே எடுத்த போது உரிமையாளர் அச்சமடைந்து கத்தி கூச்சலிட்டார். இதன்போது அங்கு வந்தவர்கள் தம்மை பிடித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸார் கைது செய்யப்பட்ட இளைஞர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.