சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் திடீரென மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்
2425Shares

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கை வந்த ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

தனது திருமண நாளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கை வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி கல்வயல் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் சுகவீனமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது இறப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையைப் பார்வையிட்டு பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மூலம் விசாரணைகளை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இறப்பு விசாரணைகளை மேற்கொண்ட திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சட்ட மருத்துவ அலுவலர் மூலம், உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.