யாழ்ப்பாணம் உள்பட பல இடங்களை சேர்ந்த இலங்கையர்கள் வெளிநாட்டில் மாயம்! வலைபோட்டு தேடும் இலங்கை

Report Print Vethu Vethu in சமூகம்
2111Shares

தொழிலுக்காக வெளிநாடு சென்ற நீண்ட காலமாக தொடர்பற்றிருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பேருவளை, அம்பாறை, நுவரெலியா, கடவத்தை, பூண்டுலோய, யக்கல, மாத்தளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 பணியாளர்கள் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் இருப்பின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 0112-864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் விபரம் பின்வருமாறு,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே.திசோத்மன் என்ற நபர் 2014.03.12 திகதி மலேசியா சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

பேருவளையை சேர்ந்த முஸ்ர்பா என்ற பெண் 2004.09.10 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அம்பாறையை சேர்ந்த பிரேமவத்தி என்ற பெண் 2003.12.15 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் 2002.02.10 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த மொனேஷ்வரி என்ற பெண் 2010.11.02 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த காலி அம்மா என்ற பெண் 1998.02.06 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

பூண்டுலோய பிரதேசத்தை சேர்ந்த வசந்தி என்ற பெண் 2004.08.25 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த மாலினி என்ற பெண் 2002.10.16 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

யக்ககல பிரதேசத்தை சேர்ந்த மனோஜா தினேஷனி என்ற பெண் 2011.08.24 திகதி குவைத் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த உமாராணி என்ற பெண் 2005.01.31 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.