மதுஷூடன் கைது செய்யப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்த நபர்

Report Print Steephen Steephen in சமூகம்
1262Shares

மாகந்துரே மதுஷ் என்ற திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக்குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுஷூன் கைது செய்யப்பட்ட நபர்களில் ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டுள்ள நபரும் இருப்பதாக துபாயில் வெளியாகும் கலீஜ் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

மதுஷின் இரண்டாவது மனைவியின் மகனது பிறந்த தினத்திற்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்றிருந்த 6 பாடகர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடக்கம்.

மேலும் மதுஷூடன் கைது செய்யப்பட்ட 5 பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கெசல்வத்தே தினுக, கனிச்சபானி இம்ரான், அங்கொட சுட்டா ஆகியோரும் அதில் அடங்குகின்றனர்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அங்கு இருந்து கொக்கேய்ன் உட்பட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், ராஜதந்திரிகள் போன்ற அரச உயர் அதிகாரிகளுக்கே ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.