வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாடுகள் இன்று வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதியுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றொசாந் பெர்ணான்டோவிற்கு எதிராக இம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும், கஞ்சா கடத்தல் காரர்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்திருந்தார்.

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ள பொலிஸார் இவ்வாறு தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்கும் செயற்பாட்டினை செய்யக் கூடாது என்று தெரிவித்தும், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே தவராசா மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.