ஆசிரியர் கல்லூரிக்குள் நடக்கும் மோசமான செயற்பாடுகள் அம்பலம்! கொந்தளிக்கும் மாணவர்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்
587Shares

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள், இன்றைய தினம் வகுப்பு பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரியின் காரியாலயத்தில் மது அருந்திய பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களை வெளியேற்றக்கோரியும், முறையாக சுத்தமான உணவு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே கல்லூரி வளாகத்தினுள் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கல்லூரியில் சுகாதாரம் இன்றி சமையல் நடவடிக்கையில் மேற்கொள்வதாக ஆசிரிய பயிலுனர்கள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றைய தினம் கொட்டகலை மற்றும் தலவாக்கலை பொது சுகாதார குழு மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் மூலம் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட சமையல் அறையை சீல் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நேற்று இரவு மற்றும் இன்று காலையும் முறையாக உணவு வழங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் நீண்ட காலமாக கடமையாற்றும் கல்லூரியின் பதிவாளர் மற்றும் சக அதிகாரிகள் இருவரும் நேற்று இரவு காரியாலயத்தில் மது அருந்தியதால் குறித்த அதிகாரிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த அதிகாரிகளுக்கு திம்புள்ள, பத்தனை பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும், பதிவாளரையும் அதிகாரிகளையும் ஸ்ரீபாத தேசிய கல்லூரியிலிருந்து வெளியேற்றும் வரையில் தொடர் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஆசிரியர் பயிலுனர் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.