இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் நிதியுதவியளித்தல் தொடர்பான செயலமர்வு

Report Print Mubarak in சமூகம்
49Shares

திருகோணமலை மீள்குடியமர்த்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 53 இளைஞர் யுவதிகளுக்கு வங்கிகளினூடாக சுயதொழிலுக்கான நிதியுதவியளித்தல் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த செயலமர்வு இன்று திருகோணமலை சர்வோதய கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், யூ.என்.டி.பி.மற்றும் பீஸ் வின்ஸ் யப்பான் ஆகிய நிறுவனங்களின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தின் மீள்குடியமர்த்தப்பட்ட மூதூர், கிண்ணியா மற்றும் குச்சவெளி போன்ற பிரதேசங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 53 இளைஞர் யுவதிகளுக்கே குறித்த செயலமர்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது இவர்களுக்கு வங்கிகள் ஊடாக சுயதொழிலுக்கான நிதியுதவிக்கான வழிகாட்டல்கள் மற்றும் சுயதொழிலை இலாபமூட்டும் வகையில் எவ்வாறு மேற்கொள்வது, தொழிலை கையாளும் முறைகள் அத்தோடு வங்களின் செயற்பாடுகள் தொழிலுக்கான முக்கியத்துவம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வங்கிகளின் திட்ட பிரச்சார அமர்வு எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியமர்த்தப்பட்ட கிண்ணியா, மூதூர் மற்றும் குச்சவெளி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தெரிவு செய்யப்பட்ட 53 இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.