கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வ நகர் கிராமத்திற்குள் இன்று புதன்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயிர்களையும், சுற்று வேலிகளையும் துவம்சம் செய்துள்ளன.

இதன்போது தென்னை மரங்கள், வாழை மரங்கள் மற்றும் சுற்று வேலிகள் என்பனவற்றினை இவ்வாறு துவம்சம் செய்துள்ளன.

உயிரை பணயம் வைத்துக் கொண்டு சிறு பிள்ளைகளுடன் செல்வநகர் கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும், கஷ்டப்பட்டு வளர்த்த பயிர்களை காட்டு யானைகள் துவம்சம் செய்துள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதே வேளை தொடர்ந்தும் செல்வநகர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமையால் வேலி அமைத்துத் தருமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers