அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தமது இலங்கை மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
வெஸ்ட் ஒஸ்ட்ரேலியா செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
40 வயதான தர்ஸிக்கா குடலிகம வித்தான என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார்.
இது தொடர்பில் கணவரான உபேந்திர பத்மஶ்ரீ இஹலஹேவ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் வாரத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
இந்தநிலையில் இந்தக்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.