மட்டக்களப்பில் காட்டு யானைகளால் அழிவு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு, வவுணதீவில் உள்ள ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களுக்குள் தினமும் உட்புகும் காட்டு யானைகளால் அழிவுகள் ஏற்படுத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் காடுகளை கடந்து வந்து கிராமங்களுக்குள் உட்புகுவதினால் கிராமவாசிகளின் இருப்பிடங்கள் சேதமாக்கப்படுவதோடு மரங்களும் துவம்சம் செய்யப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானைகளை விரட்டும்போது அவை மூர்க்கமடைந்து தாக்க வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கிராம மக்களின் அச்சத்தைப் போக்கவும், தோட்டங்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கும், காட்டுக்குள் யானைகளை விரட்டியடிப்பதற்கும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் உதவி புரிய வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.