சிசிரிவி கமராவினை அகற்றி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

Report Print Rusath in சமூகம்

சிசிரிவி கமரா உள்ளிட்ட உபகரணங்களை வீட்டிலிருந்து அகற்றி, பணம், தங்க நகைகள் என்பனவற்றைத் திருடிச் சென்ற சந்தேக நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பொலிஸ் குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது வாழைச்சேனையில் வைத்து 23 வயதான இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 26 வயதான இன்னுமொரு சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்படும் போது சம்பவம் நடந்த வீட்டில் திருடப்பட்ட சிசிரிவி கமராவின் சில உதிரிப் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குறித்த வீட்டில் திருடப்பட்டதாக முறையிடப்பட்ட சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணம் குறித்தும் தங்க ஆபரணங்கள் குறித்தும் சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருடப்பட்ட சிசிரிவி கமராவும் அதன் இணைப்பாகங்களும் சுமார் 62 ஆயிரம் ரூபாய் பெறுமதியானது என முறையிடப்பட்டிருந்தது. அத்துடன் 2 பவுண் தங்க நகைகளும், 60000 ரூபாய் பணமும் திருடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Offers