ஜே.வி.பி நியூஸ் இணையத்தளத்திற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Report Print Vethu Vethu in சமூகம்
236Shares

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகத்தின் முன் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

செங்கலடி பிரதேசசெயலாளர் நா.வில்வரெத்திணம் அவர்களைப் பற்றி சில இணையத்தளங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே உத்தியோகத்தர்கள் இவ்வாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யாதே! அரச அதிகாரிகள் மீது வேண்டுமென்று அவதூறு வெளிப்படுத்துவதை நிறுத்து. என சில வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை உத்தியோகத்தர்கள் ஏந்தியிருந்தனர்.

சில ஊடகவியலாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம் சம்மந்தமான கருத்து குரல் பதிவை பதிவு செய்ய முற்பட்டவேளையில் உத்தியோகஸ்த்தர் ஒருவரால் யாரும் குரல் பதிவு கொடுக்க வேண்டாம் எனக் கூறி அனைவரையும் பிரதேச செயலகத்தினுள் அழைத்துச் சென்றார். அத்துடன் கவனஈர்ப்பு போராட்டம் முடிவடைந்தது.