நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்ற ஜமுனா

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கை வந்திருந்த இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஜமுனா இன்றைய தினம் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த டிசம்பர், 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ள ஜமுனா கப்பல் வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறைவுசெய்து மீள திரும்பியுள்ளது.

நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டுள்ளது.

ஜமுனா கப்பல் கொழும்பிலிருந்து காலி வரையான தனது கடற்கரை ஆய்வுகளை நிறைவு செய்து கடந்த மாதம் நான்காம் திகதி காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.