சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இன்றைய தினம் குறித்த மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந் நிலையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை காட்டுப்பகுதியில் வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களிடம் இருந்து 24 பாலை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த மரங்கள் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும் தெரியவந்துள்ளது.
இவ் விடயம் தொடர்பபான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.