தமிழர்கள் ஒன்று திரள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தற்போது உருவாகியுள்ளது!

Report Print Akkash in சமூகம்

தலைநகரில் தமிழர்களின் வாக்குகளை மட்டும் வாங்கி கொண்டு தமது அமைச்சரவை பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள அமைச்சர்கள் தலைநகர் தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பது கேள்விகுறியாகவுள்ளது என மேல்மாகாணசபை உறுப்பினர் சன் குகவர்தன் தெரிவித்துள்ளார்.

இந் நாட்டில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அநீதிக்கு எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்றாலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பிரச்சினை இருகின்றது மலையக மக்களுக்கு பிரச்சினைகள் இருகின்றது இருப்பினும் இவற்றை எந்த அரசியல்வாதிகளும் கண்டு கொள்வதில்லை.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என இளைஞர் யுவதிகள் தட்டி கேட்க வேண்டிய நிலையும், தமிழர்கள் ஒன்று திரள வேண்டிய ஒரு நிர்ப்பந்தமும் தற்போது உருவாகியுள்ளது.

தலைமை என்றால் எல்லோரையும் அனைத்து கொண்டு தமிழ் மக்களின் நலன்களை மட்டுமே அக்கறையாக கொண்டு இளைஞர்களை கரம் தூக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers