நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Report Print Steephen Steephen in சமூகம்
91Shares

கொழும்பு உட்பட சில பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் உட்பட 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் போக செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் அதிகாரியான நேவி சம்பத் என்ற லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உட்பட சந்தேக நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தின் 10வது சந்தேக நபரான நேவி சம்பத், 11வது சந்தேக நபராபன அண்ணாச்சி என அழைக்கப்படும் கடற்படையின் சிறு ஊழியர் மற்றும் சஞ்ஜீவ பிரசாத் சேனாரத்ன ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் கீழ் கடமையாற்றிய ரியர் அத்மிரல் மற்றும் இன்னுமொரு கடற்படை அதிகாரி, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த ஆட்கடத்தல் சம்பவத்தில், சம்பத் முனசிங்க, முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் கொமடோர் சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய்கள், லக்ஷ்மன் உதய குமார, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிட்ட இஹலகெதர தர்மதாச, ராஜபக்ச பத்திரனலாகே கித்சிறி, கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ், லெப்டினட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி முதல் செப்டம்பல் 17ஆம் திகதி வரையான காலத்தில் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, திருகோணமலை, மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் 11 பேர் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.