பால்மாவில் விலங்கு எண்ணெய்? விசாரணைகள் முன்னெடுப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பால்மா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நுகர்வோர் அதிகாரசபை இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணை அறிக்கையை மையமாகக்கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒன்றில் பன்றி எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் புத்திக பத்திரன கூறிய தகவலை அடுத்தே விசாரணை தொடாபான தகவலை கிரியெல்ல வெளியிட்டுள்ளார்.