சங்கானை பிரதேச ஆளுகைகுற்பட்ட சுழிபுரம் கலைவாணி சனசமூக நிலையத்தில், கிராமிய மேம்பாடு, மற்றும் மக்கள் குறைகேள் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடல் இன்று மதியம் இடம்பெற்றிருந்தது.
கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் வெ.சிவசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன், கலந்துரையாடலை மேற்கொண்டு கிராமிய அடிப்படை மேம்பாடுகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்களிடம் தெரிவித்திருந்தார்.
சுழிபுரம் மத்தி கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் நெல், மற்றும் தானிய செய்கைகளின் போது கால் நடை விலங்குகளினால் பயிர்கள் சேதமாக்கப்பட்டு அழிவடைவதாக தெரிவித்து முன் எல்லைப்பகுதியினை சுற்று மதிலாக அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கிராமத்தில் உவர் நீராக காணப்படுவதனால் பொருத்தமான இடத்தை தெரிவு செய்து தருவதாகவும், அதன் உரிய இடத்தில் குடி நீர் தேவையை நிவர்த்தி செய்வதற்காக கிணறு ஒன்றை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.
கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த சதாசிவம் இராமநாதன்,
“முன்னைய காலத்தில் ஆயுத பலத்தை விஞ்சிய அளவுக்கு கல்வி மற்றும் பண பலத்துடன் ஜனநாயக முறைமையில் வாழ்க்கையை அமைத்து செயற்பட்டிருந்தோம்.
ஆனால் இன்று மீண்டும் ஜனநாயகத்தை நாட்டி விட்டோம் என மார்தட்டுபவர்கள் மத்தியில், மக்கள் சமூக வாழ்க்கை அபிவிருத்திகளை அடையாமல் அல்லல் படுகின்றார்கள்.
அதற்கான நிரந்தர தீர்வுகளை நீண்டகால அடிப்படையில் பூர்த்தி செய்து வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான உயர்மட்ட குழு அதற்கான செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும்” தெரிவித்தார்.