கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தால் இன்று அதிகாலை நேர்ந்துள்ள சோகம்

Report Print Mubarak in சமூகம்

கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தொன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை ஒலுவில் வயலினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற குறித்த பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

அதிக வேகமும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையுமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.