இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தயாராகும் சர்ச்சைக்குரிய நபர்

Report Print Vethu Vethu in சமூகம்

மரண தண்டனையை நிறைவேற்றும் அளுகோசு பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு பிரபலமான நாமல் குமார தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுபாயில் கைது செய்யப்பட்ட மாகதுரே மதுஷ் என போதை பொருள் வர்த்தகருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக தான அளுகோசு பதவியை ஏற்க தயாராக இருப்பதாகவும், சம்பளம் இன்றி அந்த பதவியை ஏற்பதற்கும் தான் தாயாராக இருப்பதாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பரபரப்பான தகவலை வெளியிட்டு, நாமல் குமார இலங்கை முழுவதும் பிரபல்யம் அடைந்திருந்தார்.

இதேவேளை, யார் தடுத்தாலும்,அடுத்து வரும் மாதங்களில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers