8 வருடங்களுக்கு மேலாக தற்காலிக வீடுகளில் வசித்தவர்களுக்கு நிரந்தர வீடுகள்

Report Print Mohan Mohan in சமூகம்

8 வருடங்களுக்கு மேலாக தற்காலிக வீடுகளில் வசிந்து வந்த 542 குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுகள் அமைத்து கொடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர், ரமேஸ் தலைமையில் இன்று காலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் 542 குடும்பங்களுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட கலந்துரையாடலில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

பெரியஇத்திமடு கிராம அலுவலர் பிரிவில் 4 வீடுகளும், கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 13 வீடுகளும், கனகரத்தினபுரம் கிராம அலுவலர் பிரிவில் 14 வீடுகளும், பேராறு கிராம அலுவலர் பிரிவில் 15 வீடுகளும்,

பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 14 வீடுகளும், கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் 5 வீடுகளும், தண்டுவான் கிராம அலுவலர் பிரிவில் 8 வீடுகளும், காதலியார் சமணங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 41 வீடுகளும்,

புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 10 வீடுகளும், கணேசபுரம் கிராம அலுவலர் பிரிவில் 13 வீடுகளும், ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் பிரிவில் 40 வீடுகளும், வித்தியாபுரம் கிராம அலுவலர் பிரிவில் 24 வீடுகளும்,

கற்சிலைமடு கிராம அலுவலர் பிரிவில் 27 வீடுகளும், தட்டயர்மலை கிராம அலுவலர் பிரிவில் 23 வீடுகளும், முத்துவினாயகபுரம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும், ஒதியமலை கிராம அலுவலர் பிரிவில் 2 வீடுகளும்,

பழம்பாசி கிராம அலுவலர் பிரிவில் 27 வீடுகளும், முத்துஜயன்கட்டுகுளம் கிராம அலுவலர் பிரிவில் 29 வீடுகளும், பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 5 வீடுகளும், மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 65 வீடுகளும்,

பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 13 வீடுகளும், திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் 55 வீடுகளும், இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 29 வீடுகளும், தச்சடம்பன் கிராம அலுவலர் பிரிவில் 8 வீடுகளும்,

ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் 20 வீடுகளும், அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் 13 வீடுகளும், மணவாளன்பட்டமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 16 வீடுகளுமாக மொத்தமாக 542 வீடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers