வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய பெண் ஒருவர் ஹொரனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி அவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட 2 இலட்சத்து 95,000 ரூபாய் பணம் மற்றும் 40 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பெண் ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான பெண் என குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் ஹொரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.