பூஜைப்பொருட்களுடன் மந்திரவாதியொருவர் செய்த காரியம்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவபொத்தான - றத்மலை, கோனாவ காட்டு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹடகஸ்திகிலிய - பீனுகம பகுதியை சேர்ந்த 55 வயதுடைய மந்திரவாதி, ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டுவதாக பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே நால்வரும் வசமாக சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பூஜைக்கு பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நால்வரும் இன்று கெப்பித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.