பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவபொத்தான, றுவன் வெலி மத்திய மஹா வித்தியாலயதிற்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய எம்.டி.எம்.பண்டார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 5000 ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பணத்தை இலஞ்சமாக பெறவில்லை எனவும், பாடசாலையின் அபிவிருத்தி குறித்தே அப்பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி தனிப்பட்ட கோபத்துக்காக வேண்டி இவருக்கு பணம் கொடுத்து அவரை கைது செய்ததாகவும் அதற்கு தங்களுடைய எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாடசாலையின் இரண்டு பேன்ட் வாத்திய குழுக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கான ஆடைகளை பெற்றுக் கொள்வதற்கே இப்பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாங்கப்பட்ட பொருட்களை முன்னால் வைத்த வண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.