இலங்கையில் தேடப்பட்டு வருபவருடன் சிக்கிய பிரபல பாடகர்கள் வழங்கியுள்ள வாக்குமூலம்

Report Print Steephen Steephen in சமூகம்

துபாய் நாட்டில் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் உட்பட சந்தேகநபர்களுடன் இருந்த மூன்று பாடகர்கள் தமக்கும், போதைப்பொருள் வியாபாரத்திற்கு சம்பந்தமில்லை என பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

மதுஷ் உட்பட இந்த சந்தேகநபர்கள் துபாயில் ஹோட்டல் ஒன்றில் நடந்த விருந்துபசார நிகழ்வில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள சிங்கள பாடகர்களின் குருதி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, அவர்கள் குறித்த முடிவு அறிவிக்கப்படும் என துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் துபாய் பொலிஸார் தொடர்ந்தும் வாக்குமூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகவும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவராக மதுஷ் கருதப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers