21.24 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 14 பேருக்கு சொந்தமான காணி அதன் உரிமையாளர்களிடம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வழங்கி வைத்துள்ளார்.

படையினர் வசமிருந்த 21.24 ஏக்கர் காணிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இதில் படையின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணி அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையல் விடுவிக்கப்பட்ட 39.95 ஏக்கர் காணிகளில் மேற்படி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள போதும் மேலும் 18.71 ஏகக்கர் காணி இன்னமும் கையளிக்கப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது.

Latest Offers