சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பணத்தை பந்தயமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களும், ஒரு ஆணும் மாரவில பொலிஸாரினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரவில, கொடவெல சந்தியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த சூதாட்ட நிலையம் இயங்கியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சூதாட்ட நிலையத்தை நடத்தியதாக கூறப்படும் பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 40 முதல் 50 வயதானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.